விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் புதிய உஜ்வாலா 2.0 இணைப்புக்கு விண்ணப்பிக்கவும்

உஜ்வாலா 2.0 இன் கீழ் இணைப்பைப் பெறுவதற்கான தகுதி வரம்புகள்

  1. விண்ணப்பதாரர் (பெண் மட்டும்) 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  2. எண்ணை விற்பனை செய்யும் எந்த ஒரு நிறுவனத்தின் மற்றொரு எல்பிஜி (LPG) இணைப்பும் அந்த வீட்டில் இருக்கக்கூடாது.
  3. பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய பெண் - சமூக பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் (SECC) (AHL TIN) கீழ் பட்டியலிடப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY), தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள் மற்றும் நதித் தீவுகளில் வசிக்கும் மக்கள்,அல்லது 14-புள்ளி அறிவிப்பின்படி உள்ள எந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

தேவையான ஆவணங்கள்

  1. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (eKYC)
  2. விண்ணப்பதாரர் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முகவரியில் (அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவிற்கு கட்டாயமில்லை) வசிப்பவராக இருந்தால், விண்ணப்பதாரரின் அடையாளச் சான்று மற்றும் முகவரிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை.
  3. விண்ணப்பம் செய்யப்படும் மாநிலத்தால் வழங்கப்படும் ரேஷன் கார்டு/(இடம்பெயர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு) குடும்ப அமைப்பு பற்றி பிற மாநில அரசு அளிக்கும் ஆவணம்/இணைப்பு 1 இன் படி அளிக்கப்படும் சுய-அறிக்கை.
  4. பயனாளியின் ஆதார் மற்றும் ஆவணத்தின் வரிசை எண் 3 இல் குறிப்பிட்டுள்ள 18 வயது நிரம்பிய குடும்ப உறுப்பினர்களின் ஆதார்.
  5. வங்கி கணக்கு எண் மற்றும் IFSC
  6. குடும்பத்தின் நிலைக்கு ஆதாரமாக துணை KYC

விண்ணப்பதாரர்கள் அவர்கள் விரும்பும் எந்தவொரு விநியோகஸ்தரிடமும் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் போர்டல்.