விறகு, நிலக்கரி, மாட்டுசாண கேக்குகள் போன்ற பாரம்பரிய சமையல் எரிபொருள்களைப் பயன்படுத்தி வந்த கிராமப்புற மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு எல்பிஜி போன்ற சுத்தமான சமையல் எரிபொருள் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் 2016 மே மாதம்,பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (எம்.ஓ.பி.என்.ஜி) 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' (பி.எம்.யு.ஒய்) ஐ ஒரு முக்கிய திட்டமாக அறிமுகப்படுத்தியது. பாரம்பரிய சமையல் எரிபொருள்களைப் பயன்படுத்துதல் கிராமப்புறபெண்களின் உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்தின.
இத்திட்டம் 2016 மே 1 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பாலியாவில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மார்ச் 2020க்குள் 8 கோடி நலிவடைந்த குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்க இலக்கு விதிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் 8-வது கோடி எல்பிஜி இணைப்பை 2019 செப்டம்பர் 7 ஆம் தேதி, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் வழங்கினார்.
உஜ்வாலா 2.0: புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சிறப்பு வசதியுடன் PMUY திட்டத்தின் கீழ் 1.6 கோடி LPG இணைப்புகள் கூடுதல் ஒதுக்கீடு. டிசம்பர் 22 இல் உஜ்வாலா 2.0 இன் கீழ் இணைப்புகளின் இலக்கு எண்ணிக்கை எட்டப்பட்டது, இதன் மூலம் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த இணைப்புகள் 9.6 கோடியாக உயர்ந்தது.
PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வெளியிட இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த இலக்கை 10.35 கோடியாகக் கொண்டு, இப்போது இணைப்புகள் வெளியிடப்படுகின்றன.