20.05.21 தேதியிட்டு, M- 13017 (11)/2/2021 - LPG-PNG என்ற குறிப்புடன் PMUY கடிதத்தின் கீழ் 1 கோடி LPG இணைப்புகளை வெளியிட MoPNG ஒப்புதல் அளித்துள்ளது. அது குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றின் பதில்களும் பின்வருமாறு.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த, தனது வீட்டில் LPG எரிவாயு இணைப்பு வைத்தில்லாத பெண்மணி, உஜ்ஜ்வாலா 2.0ன் கீழ் தகுதி பெறுவார்கள். பயனாளிகள் பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்:
விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:
இணைப்பு கொடுக்கப்பட வேண்டிய முகவரி ஆதார் அட்டையில் இருந்தால், அதை அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்றாகப் (PoA) பயன்படுத்தலாம்.
விண்ணப்பதாரர் ஆன்லைனிலும் (இணையம் வாயிலாகவும்) ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
பின்வரும் ஆவணங்கள் விநியோகஸ்தரால் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்:
விநியோகஸ்தரால் OMC போர்ட்டலில் சேகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஆவணம்
அத்தகைய பயனாளிகளை பதிவு செய்ய இயலாது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதார் பதிவு மற்றும் அதற்கான ரசீதைக் காட்ட விநியோகஸ்தர் முயற்சி செய்ய வேண்டும், அவ்வாறெனில் விண்ணப்பதாரர் உஜ்வாலா 2.0 இன் கீழ் அவர் பதிவு செய்யப்படலாம். வயது வந்த குடும்ப உறுப்பினர் இறந்தாலோ அல்லது திருமணத்தின் காரணமாக குடும்ப உறுப்பினர் யாரேனும் பிரிந்தாலோ இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் போன்ற ஆவணச் சான்றுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர் சமர்ப்பித்த 14-விஷயங்கள் அடங்கிய அறிவிப்பே உஜ்வாலா 2.0 இன் கீழ் தகுதியான ஏழ்மை குடும்பமாக கருதுவதற்கான அடிப்படை அளவுகோலாகும். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இது கட்டாயமாகும்.
ரேஷன் கார்டு என்பது பயனாளியின் குடும்ப அமைப்பைக் கண்டறியும் நோக்கத்திற்காக மட்டுமே என்பதால், APL அல்லது BPL என எந்த வகையான ரேஷன் கார்டாக இருந்தாலும், அது கருத்தில் கொள்ளப்படும்.
ஆம், குடும்பத்தில் வயது வந்த ஒரே உறுப்பினர்தான் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் ரேஷன் கார்டு ஆதார ஆவணங்கள் இருந்தால் கொடுக்கப்படும். ரேஷன் கார்டில் கூடுதலான வயது வந்த உறுப்பினர்கள் இடம்பெற்று இருந்தால், இறந்த குடும்ப உறுப்பினரின் இறப்புச் சான்றிதழ் அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறிய உறுப்பினரின் திருமணச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
வழங்கப்படாது. PMUY இணைப்பு ஏழ்மையான குடும்பத்தில் உள்ள வயது வந்த பெண் உறுப்பினரின் பெயரில் மட்டுமே கொடுக்கப்படும்.
ஆம். உஜ்வாலா 2.0 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட இணைப்புகளுக்கு, பயோமெட்ரிக் அல்லது மொபைல் OTP மூலம் ஆதார் அங்கீகாரம் மேற்கொள்ளப்படும். அசாம் மற்றும் மேகாலயாவில் மட்டும் ஆதார் அங்கீகாரம் கட்டாயம் கிடையாது.
ஆம், உஜ்வாலா 2.0 வழிகாட்டுதல்களின்படி விண்ணப்பதாரர் வேறு ஏதேனும் தகுதி வரம்புகளை அவர் பூர்த்தி செய்திருந்தால் அவருக்கு இணைப்பு வழங்கப்படலாம்.
எவ்வாறாயினும், விண்ணப்பதாரர் சமர்ப்பித்த ஆதார ஆவணத்தின் அடிப்படையில் மட்டுமே இணைப்பின் SC அல்லது ST நிலை தீர்மானிக்கப்படும்.
ஆம், விண்ணப்பதாரர் உஜ்வாலா 2.0 வழிகாட்டுதல்களின்படி தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும், அதாவது அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர்களின் ஆதாரையும், மேலே Q (6) இல் கொடுக்கப்பட்டுள்ளபடி கட்டாய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆம், விண்ணப்பதாரர் சமர்ப்பித்த அனைத்து விண்ணப்பங்களும் தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் PMUY இன் கீழ் விண்ணப்பத்தைத் தொடர்வதற்கான சுய-அறிக்கையுடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய குடும்ப உறுப்பினர் சேர்க்கப்பட்டால் KYC மீண்டும் OMC நகல் நீக்கத்திற்கு செல்லும்.
முன்பே சமர்ப்பிக்கப்பட்ட KYC களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நகல் நீக்கப்பட்ட ரேஷன் கார்டு விஷயத்தில், ரேஷன் கார்டை மாற்றுவது அனுமதிக்கப்படாது. அத்தகைய நிகழ்வுகளுக்கு நுகர்வோர் புதிய KYC ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
அனுமதி பெற்ற KYC களுக்கு வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வசதி உள்ளது.
ஆம், KYC தேதியின்படி ரேஷன் கார்டில் இடம்பெறுபவர்களின் வயதின் அடிப்படையில் வயது வந்த குடும்ப உறுப்பினர்கள் அனுமானிக்கப்பட வேண்டும், மேலும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் விண்ணப்பதாரரிடமிருந்து சேகரிக்கப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அத்துடன் அவர்களின் வயது அடங்கிய சுய அறிவிப்பை விண்ணப்பதாரரிடமிருந்து பெற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களுடன் விநியோகஸ்தர்கள் இதனைச் சரிபார்க்க வேண்டும். விண்ணப்பதாரரின் ரேஷன் கார்டுடன் இந்த அறிவிப்பையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் மேலே உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் .
இல்லை. விண்ணப்பதாரருக்கு (மாமியாருக்கு) ஏற்கனவே இணைப்பு இருப்பதால், அவரது பெயரில் மற்றொரு இணைப்பை வழங்க முடியாது, ஆனால் இணைப்பை நகரத்திற்கு மாற்றலாம் மற்றும் முகவரி மாற்றும் வசதி விரைவில் செய்து தரப்படும்.
ஆம், இணைப்பை மாற்றிக் கொள்ளலாம், மேலும் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
ஆம். PMUY இணைப்பை வழங்குவதற்கு முன், நிலையான வடிவத்தின்படி விண்ணப்பதாரரின் வளாகத்தில் நிறுவல் செய்வதற்கு முந்தைய ஆய்வு மேற்கொள்ளப்படும். OMC இன் மொபைல் செயலி மூலம் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி OTP சரிபார்ப்பு மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் மற்றும் விநியோகஸ்தரால் கையொப்பமிடப்பட்ட நேரடி ஆய்வு வடிவத்தின் மூலமாகவோ இது அங்கீகரிக்கப்படும்.
ஆம், Q(2) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு வயது வந்த பெண் உறுப்பினருக்கு இது பொருந்தும்.
விண்ணப்பதாரர் 14.2 கிலோ ஒற்றை சிலிண்டர் அல்லது 5 கிலோ ஒற்றை சிலிண்டர் அல்லது 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம்.
ஆம், உஜ்வாலா 2.0ன் கீழ், OMCகள் வாடிக்கையாளருக்கு LPG அடுப்பு மற்றும் முதல் ரீஃபில் ஆகியவற்றை இலவசமாக வழங்கும். எனவே, உஜ்வாலா 2.0ன் கீழ் LPG இணைப்பைப் பெறும்போது வாடிக்கையாளர் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர் தனது குடும்ப அமைப்பை விவரிக்கும் அனைத்து வயதுவந்த குடும்ப உறுப்பினர்களையும் KYC இல் அறிவிக்க வேண்டும் மற்றும் அவரது ஆதாருடன் கூடுதலாக குடும்பத்தின் அனைத்து வயதுவந்த உறுப்பினர்களின் ஆதார் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை குடும்பம் பிரிந்து, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் முந்தைய இணைப்போடு இணைக்கப்பட்டிருந்தால், விண்ணப்பதாரர் புதிய ரேஷன் கார்டைச் சமர்ப்பிப்பதன் மூலம் தற்போதுள்ள LPG இணைப்பிலிருந்து தங்கள் ஆதார் எண்களை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் / OMC ஐ தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பதாரர் Q (6) இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம்.
ரேஷன் கார்டின் படி ஒரே குடும்பத் தலைவர் (HOF) உள்ள குடும்பங்களில் (அதாவது 2 சகோதரர்களின் குடும்பங்கள் போன்றவை), மாமியார், மாமியார் அல்லது குடும்பத்த தலைவர் ஆகியோரின் ஆதார் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் இணைப்புகள் கொடுப்பதற்கு அனுமதிக்கப்படும். எவ்வாறாயினும், இத்தகைய சூழ்நிலையில், விண்ணப்பதாரர் தனது குடும்ப அமைப்பை விவரிக்கும் வகையில் வயது வந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் KYC இல் தெரிவிக்க வேண்டும், மேலும் அவரது ஆதாருடன் கூடுதலாக குடும்பத்தில் உள்ள அனைத்து வயதுவந்த உறுப்பினர்களின் ஆதார் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.