"எல்பிஜி இணைப்பில் பெயர் மாற்றம் மற்றும்
முறைப்படுத்தும் நடை முறைகள்"
எல்பிஜி இணைப்பை முறைப்படுத்துதல்:
உதாரணம் 1
சிலிண்டர்/கள், பிரஷர் ரெகுலேட்டர் வைத்திருக்கும் நபர், அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் இணைப்பை முறைப்படுத்த விரும்புகிறார்.
- உபகரணங்களை தற்போது வைத்திருக்கும் நபரின் பெயரில் இணைப்பை மாற்றுவதற்கு பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரிடமிருந்து அறிவிப்பு / ஒப்புதல்.
- சந்தா ரசீது (SV) மற்றும் உபகரணங்களை தற்போது வைத்திருப்பவரிடமிருந்து, அத்தகைய இணைப்பு பரிமாற்றத்தின் காரணமாக எண்ணெய் நிறுவனத்திற்கு உண்டாகும் எந்தவொரு உரிமைகோரலுக்கும் எதிராக இழப்பீடு வழங்கும் உறுதி ஆவணம். - விநியோகஸ்தரிடம் ஆவணத்தின் படிவங்கள் கிடைக்கும்.
- கொடுத்த விவரங்களை விநியோகஸ்தர் தங்களிடம் உள்ள பதிவுகளோடு சரி பார்ப்பார். கொடுத்த தகவல்கள் சரியாக இருந்தால், அசல் சந்தா ரசீது வைத்திருப்பவரின் பெயரில் மாற்று ரசீது (TV) தயாரித்து, எண்ணெய் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டவருக்கு பாதுகாப்பு வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படும்.
- நடைமுறையில் உள்ள விகிதத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகையானது உபகரணங்களைத் தற்போது வைத்திருப்பவரிடமிருந்து சேகரிக்கப்படும் மற்றும் அவரது பெயரில் புதிய சந்தா ரசீது (SV) வழங்கப்படும்.
- சந்தா ரசீது (SV) தொலைந்திருந்தாலோ/தவறுதலாக எங்காவது வைக்கப்பட்டு இருந்தாலோ, சந்தா ரசீது (SV) இன் இழப்புக்கான உறுதிமொழி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உதாரணம் 2
இணைப்பிற்கான ஆவணங்கள் ஏதுமின்றி சிலிண்டர்/கள் மற்றும் பிரஷர் ரெகுலேட்டரை வைத்திருக்கும் நபர்:
- எந்தவொரு இணைப்பு ஆவணமும் (SV/DGCC) இல்லாமல் எல்பிஜி உபகரணங்களை வைத்திருக்கும் நபர்கள், குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழியைச் சமர்ப்பித்து, தங்களிடம் இருக்கும் உபகரணங்களுக்காக நடைமுறையில் உள்ள விதிகளின் படி முழு பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும்.
உதாரணம் 3
இணைப்பு வைத்திருந்தவரின் இறப்பு காரணமாக இணைப்பு பரிமாற்றம்:
- இறந்தவரின் நெருங்கிய வாரிசு உறவினர் அசல் சந்தா ரசீதை திரும்ப சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அத்துடன் (i) இறப்புச் சான்றிதழ் மற்றும் (ii) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்/மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து ஆட்சேபனைகள் எதுவும் இல்லை எனும் கடிதம் (வரையறுக்கப்பட்ட படிவத்தின்படி) சமர்ப்பிக்க வேண்டும். அசல் எஸ்.வி(SV) இல் உள்ள அதே வைப்புத் தொகைக்கு சட்டப்பூர்வ வாரிசு பெயரில் புதிய எஸ்.வி (SV) வழங்கப்படும்.
- அசல் சந்தா ரசீது (SV) இல் உள்ள அதே வைப்புத்தொகைக்கு சட்டப்பூர்வ வாரிசு பெயரில் புதிய எஸ்.வி (SV) வழங்கப்படும்.
வாடிக்கையாளர் உயிர் வாழும் காலத்தில் பெயர் மாற்றம்:
- பொதுத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இணைப்புகளுக்கு மட்டுமே பெயர் மாற்றம் பொருந்தும். PMUY (UID)இன் கீழ் உள்ள இணைப்புகளுக்கு அவை பொருந்தாது.
- எல்பிஜி இணைப்பை வேறு பெயருக்கு மாற்றுதல் அனுமதிக்கப்படுகிறது,
அ) குடும்பத்திற்குள் (அதாவது தந்தை, தாய், மகன், மகள், சகோதரன், சகோதரி, மனைவி, குழந்தைகள்) அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு மாற்றும் பட்சத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகையில் எந்த மாற்றமும் இல்லை.
b) குடும்ப உறுப்பினர் அல்லாதவராக இருப்பவருக்கு தற்போதைய விதிகளின்படி பாதுகாப்பு வைப்புத் தொகையில் மாற்றத்துடன் அனுமதிக்கப்படும். வேறுபட்ட பாதுகாப்பு வைப்புத்தொகையை மாற்றுபவர் செலுத்த வேண்டும்.
- பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர் குடும்ப உறுப்பினருக்கு ஆதரவாக எழுத்துப்பூர்வ ஒப்புதலை சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய பரிமாற்றத்தின் மூலம் எண்ணெய் நிறுவனத்திற்கு ஏற்படும் எந்த ஒரு நஷ்டத்திற்கும் இழப்பீடு வழங்குவதாக அந்தக் குடும்ப உறுப்பினர் வரையறுக்கப்பட்ட படிவத்தில் (விநியோகஸ்தரிடம் கிடைக்கும் வடிவம்).ஒப்புதல் அளிக்கவேண்டும்.
- டர்மினேஷன் வவுச்சர் (டிவி) மூலம் அசல் இணைப்பு நிறுத்தப்படும். புதிய சந்தா ரசீது (SV) மாற்றப்பட்டவர்/முறைப்படுத்தப்பட்ட நுகர்வோர் பெயரில் வழங்கப்படும்.
குறிப்பு: மேலே உள்ள அனைத்து முறைப்படுத்தல் / பெயர் மாற்ற நிகழ்வுகளிலும், யார் பெயரில் மாற்றப்படுகிறதோ அவர் எந்த ஒரு அரசு எண்ணெய் நிறுவனத்தின் எல்பிஜி இணைப்பையும் வைத்திருக்கக்கூடாது, மேலும் அடையாளம் மற்றும் முகவரி, KYC படிவத்தை முறையாக பூர்த்தி செய்து சுய பிரகடனத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் நகல் சரிபார்த்தலுக்குப் பிறகுதான் இணைப்பு முறைப்படுத்தப்படும் மற்றும் வெற்றிகரமான அனுமதிச் சரிபார்ப்பிற்குப் பிறகு, புதிய சந்தா ரசீது (SV) வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.