இணையதளம் மூலம் புதிய எல்பிஜி இணைப்பு

நாடு முழுவதும் உங்கள் தேவைக்கேற்ப புதிய LPG இணைப்புகள் இப்போது உடனடியாக கிடைக்கின்றன. உங்கள் வீட்டில் எந்தவொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் எல்பிஜி இணைப்பு இல்லாமலிருந்தாலும், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமையல் பகுதி இருந்தாலும், நீங்கள் உங்கள் வீட்டிற்கு புதிய இணைப்பைப் பெறலாம். புதிய வீட்டு இணைப்பிற்கு, உங்கள் பகுதிக்கு சேவை அளிக்கும் அருகிலுள்ள விநியோகஸ்தரை நீங்கள் சந்தித்து இணைப்பு நிறுவப்பட வேண்டிய வசிப்பிடத்தின் அடையாளம் மற்றும் முகவரிக்கான சரியான ஆதாரத்துடன் பதிவு செய்யலாம்.

இப்போது, மொபைல் ஆப் மற்றும் இணையதளம் மூலமாகவும் புதிய இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இணைய முகப்பு எல்பிஜி இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் பின்வரும் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம். மொபைல் பயன்பாடு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் பின்வரும் வலைத்தளங்களை எல்பிஜி இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கப் பயன்படுத்தலாம்.

வசிப்பிடத்திற்கான ஆதாரத்திற்காகப் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும்ஒன்றை சமர்ப்பிக்கலாம்: -

  1. ஆதார் (UID)
  2. ஓட்டுனர் உரிமம்
  3. குத்தகை (lease) ஒப்பந்தம்
  4. வாக்காளர் அடையாள அட்டை
  5. ரேஷன் அட்டை
  6. தொலைபேசி/மின்சாரம்/குடி நீர் இணைப்புக் கட்டண ரசீது
  7. பாஸ்போர்ட்
  8. அரசு கெசெட்டேட் (Gazetted Officer) அதிகாரி அத்தாட்சி செய்த சுய அறிவிப்பு
  9. வீடு ஒதுக்கீடு / உடைமை கடிதம்
  10. வீட்டின் பதிவு ஆவணம்
  11. எல்ஐசி பாலிசி
  12. வங்கி/கிரெடிட் கார்டு அறிக்கை

இணைப்பைப் பெறுவதற்கு அடையாளச் சான்றாகப் பின்வரும் ஆவணங்களில் ஒன்று தேவை:

  1. ஆதார் (UID)
  2. பாஸ்போர்ட்
  3. வருமான வரி அட்டை (PAN Card)
  4. வாக்காளர் அடையாள அட்டை
  5. மத்திய / மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
  6. ஓட்டுனர் உரிமம்

துணைக்கருவிகள்/பாதுகாப்பு வைப்புத் தொகை :

பதிவுசெய்து விவரங்களை சரி பார்த்ததும், விநியோகஸ்தர் உங்களுக்கு குறுந்தகவல்/மின்னஞ்சல் மூலம் அறிவிப்பை அனுப்புவார். இணைப்பைப் பெற நீங்கள் விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்ளலாம்.

எல்பிஜி இணைப்பு உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும். ஆனால், எல்பிஜி இணைப்பை பெறுவதற்கு முன், நீங்கள் IS:4246 விதிகளுக்கு உட்பட்ட ஒரு ஐஎஸ்ஐ மார்க் அடுப்பையும் (ஹாட்ப்ளேட்டை), ஐஎஸ்:9573 (வகை IV) ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் உடைய சுரக்ஷா எல்பிஜி ஹோஸையும் வைத்திருக்க வேண்டும், அதனால் உங்கள் இன்டேன் இணைப்பு வெளியான பிறகு, அது உங்கள் வீட்டில் உடனடியாக நிறுவப்படும். உங்கள் எல்பிஜி இணைப்பைப் பெற, நீங்கள் பின்வரும் கட்டணங்களில் பாதுகாப்பு வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்:

மாநிலங்கள் சிலிண்டர் பிரஷர் ரெகுலேட்டர்
வடகிழக்கு மாநிலங்கள் அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூர் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.2000/-.
5 கிலோ சிலிண்டருக்கு ரூ.1150/-.
Rs 200/-
இந்தியாவின் மற்ற பகுதிகள் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.2200/-.
5 கிலோ சிலிண்டருக்கு ரூ.11150/-.
Rs 250/-