வெவ்வேறு நிறுவனங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் வசதி

மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை அளிக்க விநியோகஸ்தர்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் நோக்கில், வாடிக்கையாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சேவை செய்யும் விநியோகஸ்தர்களை தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய தற்போதைய விநியோகஸ்தரின் சேவைகளில் திருப்தி அடையாத நிலையில் அதே பகுதியில் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் விநியோகஸ்தர்களின் பட்டியலிலிருந்து ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு ஒரு விநியோகஸ்தரிடம் இடம்பெயரலாம். இந்த அமைப்பின் கீழ் வாடிக்கையாளர்களை இழக்கும் விநியோகஸ்தர் தன்னிடம் உள்ள மற்ற வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க அவர்களுக்கு தாமதமின்றி சிறந்த சேவைகள் அளிக்க முன் வருவார். இது சிறந்த வாடிக்கையாளர் திருப்தியையும், விநியோகஸ்தர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்க வேண்டியதன் அவசியத்தை தூண்டும்.

இணையதளம் மற்றும் ஆப்ஸில் பதிவுசெய்யப்பட்ட உள்நுழைவு வழியே விநியோகஸ்தர்களை மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய விநியோகஸ்தரை நேரில் அணுகி, பரிமாற்றத்திற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்து, அந்த கோரிக்கை விநியோகஸ்தரால் எற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்ற சந்தேகத்தோடு, வேறு ஒரு விநியோகஸ்தரிடம் பதிவுசெய்து, அவர்களுக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்று விநியோகஸ்தர்களை மாற்றும் வசதியில் பெரும் தடையாக இருந்த நடைமுறைகள் டிஜிட்டல் வசதிகள் மூலம் முழுமையாக எளிதாக்கப்பட்டன.

விநியோக நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் விருப்பம் ஆன்லைனில் வழங்கப்படுவதால், விநியோகஸ்தரை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர், போர்ட்டல் அல்லது ஆப் மூலம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால், அது அவர்களுடைய தற்போதைய விநியோகஸ்தரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், தானியங்கி பரிமாற்றச் செயல்முறையில் மாற்றப்படும். அதன் பின் வாடிக்கையாளர் அவர்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் இருந்து அனைத்து சேவைகளையும் பெறலாம்.

விநியோக நிறுவனங்களை மாற்ற, நுகர்வோர் செய்ய வேண்டியவை :

  1. எண்ணை விநியோக நிறுவனத்தில் இணைய தளத்திற்கு வருகை தரவும் :
  2. இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், பதிவு செய்யவும்
  3. ரீஃபில் டெலிவரி செயல்திறன் அடிப்படையில் தங்கள் பகுதிக்கு சேவை செய்யும் விநியோகஸ்தர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் நட்சத்திர மதிப்பீட்டைப் பார்க்கவும் (5 நட்சத்திரம்- சிறப்பானது, 4 நட்சத்திரம்- நல்லது, 3 நட்சத்திரம்- சராசரி, 2 நட்சத்திரம்- கீழே சராசரி மற்றும் 1 நட்சத்திரம் - மோசமானது).
  4. பட்டியலிலிருந்து அவர்கள் விரும்பும் விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நுகர்வோர் பின்னர் விநியோகஸ்தரை மாற்றும் கோரிக்கை மற்றும் அந்தக் கோரிக்கையின் தற்போதைய நிலை இவற்றை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலைப் பெறுவார்.
  6. விநியோகஸ்தரை மாற்றும் கோரிக்கை நடைமுறையில், அனைத்துப் பதிவுகளும் டிஜிட்டல் முறையில் மாற்றப்படுவதால், நுகர்வோர் தங்களுடைய தற்போதைய விநியோகஸ்தர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தரை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
  7. விநியோகஸ்தரை மாற்றும் கோரிக்கை திட்டத்தின் கீழ் இணைப்பு பரிமாற்றத்திற்கு பரிமாற்றக் கட்டணம் அல்லது கூடுதல் பாதுகாப்பு வைப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
  8. விநியோகஸ்தரை மாற்றும் கோரிக்கைத் திட்டம் செயல்திறன் மிக்க எஸ்கலேஷன் மேட்ரிக்ஸுடன் கூடிய மின்னணு கண்காணிப்பு மற்றும் அது சரியாக கவனிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதால் ஒரு நுகர்வோர் தங்கள் விருப்பப்படி எந்த விநியோகஸ்தரிடம் மாறுவதற்கு சிரமம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் வழங்கும் சேவையில் இந்த முயற்சி மேலும் சிறப்பூட்டும், ஏனெனில் இது குறிப்பிட்ட பகுதியில் சேவை செய்யும் விநியோகஸ்தர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உண்டாக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள எண்ணெய் நிறுவனத்தின் வேறு விநியோகஸ்தரிடமோ அல்லது அவரது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள வேறு நிறுவனத்தின் எல்பிஜி விநியோகஸ்தரிடமோ தங்கள் இணைப்பை மாற்றிக்கொள்ளும் வசதியை அளிக்கும்.

வெவ்வேறு எண்ணை விநியோக நிறுவனங்களில் ரீபில் பதிவு செய்யும் வசதி